ஈரோடு ஆக 20
விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம் 7 ந் தேதி கொண்டாடப்படுகிறது இதை யொட்டி
ஈரோடு இந்து முன்னணி சார்பில் ஈரோடு மாவட்டம் முழுவதும் விநாயகர் சிலை வைத்து வழிபடுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நடந்தது மாவட்டத் தலைவர் ஜெகதீசன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பொது செயலாளர் கார்த்தி முன்னிலை வகித்தார்.
அப்போது விநாயகர் சதுர்த்தியை சிறப்பாக கொண்டாட செப்டம்பர் மாதம் 7 ந் தேதி காலை 6 மணிக்கு ஈரோடு நசியனூர் ரோடு சம்பத் நகர் பிரிவில் கணபதி ஹோமத்துடன் சக்தி விநாயகர் திருவுருவம் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
ஈரோடு மாநகர் மாவட்டம் சார்பாக 1008 இடங்களிலும் மற்றும் ஈரோட்டில் பல முக்கிய இடங்களிலும் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
இதன் பிறகு விநாயகர் விசர்ஜன ஊர்வலம் அடுத்த மாதம் 10 ந் தேதி மாலை 3 மணிக்கு சம்பத் நகர் பிரிவிலிருந்து புறப்படுகிறது . இதில் இந்து முன்னணி
மாநில பொது செயலாளர் கிஷோர் குமார் கலந்து கொண்டு ஊர்வலத்தை தொடங்கி வைத்து பேசுகிறார் இந்த விநாயகர் ஊர்வலம் ஈரோட்டில் முக்கிய வீதி வழியாக சென்று ஈரோடு காவிரி கரையில் விசர்சனம் செய்வது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது
கூட்டத்தில இந்து முன்னணி மாவட்ட செயலாளர்கள் சங்கர், ரமேஷ், வக்கீல் முரளி, மாவட்ட அமைப்பாளர் முருகன், செயற்குழு உறுப்பினர் சுதீஷ் , கவின் மற்றும் மாவட்ட உட்பட பலர் கலந்து கொண்டனர்.