கிருஷ்ணகிரி டிச 12:
கிருஷ்ணகிரி அண்ணா சிலை எதிரே தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஓம் சாந்தி சங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலத் துணைத் தலைவர் லாரன்ஸ் மாநில இணை செயலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் நாராயணமூர்த்தி வரவேற்புரை ஆற்றினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 1.வணிகர்களுக்கு சுமையாக கடைகளின் வாடகை மீதான 18% GST வரியை மத்திய அரசு உடனே திரும்ப பெற வேண்டும் எனவும், 2.வணிகர்களின் வாழ்வாதாரத்தை சுரண்டி கொண்டிருக்கும் அந்நிய நாட்டு ஆன்லைன் வர்த்தகத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும் எனவும், 3.மாநில அரசு ஆண்டுதோறும் 6% கூடுதல் சொத்துவரி விதிப்பை உடனடியாக திரும்பப் பெற்றிட வேண்டும் எனவும், 4.வணிக உரிம கட்டண உயர்வு மற்றும் தொழில் வரி விதிப்பை திரும்ப பெற்றிட வேண்டும் எனவும், 5.குப்பை வரியை மாநிலம் முழுவதும் ஒரே சீராக அறிவித்திட வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வணிகர்கள் பதாகைகளை கையில் ஏந்தியவாறு மத்திய, மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கௌரவ தலைவர்களான ராயக்கோட்டை ராதாகிருஷ்ணன், மத்தூர் மாதன், ஓசூர் ஹேம்ராஜ், கிருஷ்ணகிரி நகர நிர்வாகிகளான பாலதண்டாயுதம், சத்யநாராயணன், உள்ளிட்ட கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதிலும் இருந்து 33 அமைப்புகளை சேர்ந்த வணிகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இறுதியாக மாவட்ட பொருளாளர் கே.ஆர்.குமரவேல் நன்றி உரையாற்றினார்.