திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கம் சார்பாக தினசரி நாளிதழ் நலச் சங்க உறுப்பினர்கள் மற்றும் மின் மயான ஊழியர்கள் 89 பேர்களுக்கு தீபாவளி பண்டிகை முன்னிட்டு புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி திண்டுக்கல்
ஆர்.கே.ஜி.ஜி. ரோட்டரி ஹாலில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் தலைவர் ஹெச். புருஷோத்தமன் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக மேஜர் டோனர் ஜி. சுந்தரராஜன் பி.ஏ. பி. நாதன் இணைந்து தினசரி நாளிதழ் வினியோகிஸ்தர்கள் நலச்சங்க உறுப்பினர்கள் 77 பேருக்கு தீபாவளி பண்டிகை புத்தாடைகள் மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார்கள். அதனை தொடர்ந்து எஸ்.சண்முகம் கலந்து கொண்டு மின் மயான அறக்கட்டளையில் பணியாற்றும் பணியாளர்கள் 12 பேருக்கு தீபாவளி பண்டிகை புத்தாடைகளை வழங்கினார். இதில் மொத்தம் 89 பேர்களுக்கு புத்தாடைகள் மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
நிகழ்வில்
வி.சுப்புராம் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் ரோட்டரி உறுப்பினர்களுக்கும் ,தினசரி நாளிதழ்களின் வினியோகிஸ்தர்கள் தலைவர், செயலாளர், உறுப்பினர்கள் மற்றும் மின் மயான ஊழியர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியின் முடிவில் திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் செயலாளர்
பி.சந்திரசேகரன் நன்றி கூறினார்.