திருப்பத்தூர் :ஜன:07, தமிழ்நாடு அரசுத் துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசுத் துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சண்முகம் அனைவரையும் வரவேற்று பேசினார்.
மாவட்ட தலைவர் மல்லிகார்ஜூன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் எடிசன் முன்னிலை வகித்து நிதிநிலை வாசித்தார்.
மேலும் இக்கூட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்தவும், ஊதிய முறை எந்த பாராபட்சமும் இன்றி பத்து ஆண்டுகளுக்கு மேல் பணி முடித்த ஓட்டுநர்களுக்கு தகுந்த ஊதியம் வழங்க வேண்டும். அனைத்து ஓட்டுநர்களுக்கும் வீட்டுமனை வழங்க வேண்டும். அனைத்து துறைகளிலும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் பணி அமர்த்திடவும், ஓட்டுநர்களின் எதிர்கால நலன் கருதி கட்டிடம் கட்டுவதற்கு இடம் வழங்க வேண்டும் என ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வந்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை தலைவர்கள் செல்வராஜ், அசோக், மாவட்ட துணை செயலாளர் மகேந்திரன், மாவட்ட அமைப்பு செயலாளர் ராஜமந்திரி, மாவட்ட தணிக்கையாளர் முரளி, மாநில செயற்குழு உறுப்பினர் முத்துசாமி, மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் என ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மூத்த ஓட்டுநர் 20 ஆண்டுகாலம் சிறப்பாக ஓட்டுனர் பணியினை செய்து சாதனை படைத்த அருள் என்பவருக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்ட நான்கு சவரன் பதக்கத்தினை பெற்றவருக்கு பாராட்டுகளை தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் விக்னேஷ் நன்றியுரை வழங்கினார்.