குளச்சல், பிப்- 17
குளச்சல் அருகே உள்ள கணியாகுளம் பகுதியை சேர்ந்தவர் எட்வின் ஜெயக்குமார் (60). இவர் நேற்று பைக்கில் திங்கள் நகரில் இருந்து குளச்சல் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது கல்லுக்கூட்டம் பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள சாலையில் சென்ற போது எதிரே வந்த ஆலங்காடு பகுதி சேர்ந்த சேவியர் மகன் ரெஜன் விஷால் (19) என்பவர் ஓட்டி வந்த பைக் மோதியது.
இந்த விபத்தில் கீழே விழுந்த எட்வின் ஜெயக்குமார் படுகாயம் அடைந்தார். விஷால் காயங்கள் இன்றி தப்பினார். அக்கம் பக்கத்தினர் எட்வின் ஜெயக்குமாரை மீட்டு அந்தப் பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்த புகாரின் பேரில் குளச்சல் போலீசார் ரெஜன் விஷால் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.