ஊட்டி. டிசம். 06.
நீலகிரி மாவட்டம் ஊட்டி கோத்தகிரி பிரதான சாலையில் அமைந்துள்ளது ஒரசோலை காமராஜ் நகர். நேற்று காலை பேருந்துக்காக காத்திருந்த ராஜ் எனபவரின் மனைவி ஈஸ்வரி வயது 65 அவ்வழியே வந்து பேருந்தில் வழக்கம்போல் வேலைக்கு செல்வதற்காக பேருந்து முன் பக்க வாசலில் ஏறிய போது மூதாட்டி ஏறியதை கவனிக்காத ஓட்டுநர் பேரூந்தை இயக்கிய போது உயரமான படிக்கட்டில் ஏற முடியாமல் கீழே நிலை தடுமாறி விழுந்ததால் அப்போது எதிர்பாராத விதமாக பேரூந்தின் பின்பக்க சக்கரம் அவரின் மேல் ஏறியது. படுகாயம் அடைந்த ஈஸ்வரியை அப்பகுதி மக்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது ஜனாதிபதி நீலகிரிக்கு வந்த போது சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள சாலையின் வேக தடுப்புகள் அகற்றியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர் அதனைத் தொடர்ந்து பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோத்தகிரி காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியதின் பின் போராட்டம் கைவிடப்பட்டது. அரசு போக்குவரத்து கழகத்தில் உள்ள தற்காலிக பணியாளர்களின் கவன குறைபாடும், உயரமான பேருந்து படிக்கட்டுகளாலும் இந்த விபத்து நடந்துள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் பேருந்துகளை சீரமைத்து முறையான பயிற்சி பெற்ற பேருந்து ஓட்டுனர்களை கொண்டு மக்களின் நலன் கருதி போக்குவரத்து வாகனங்களை இயக்க கோரிக்கை வைத்தனர்.