பொள்ளாச்சி அக்:02
முதியோர் தினத்தை முன்னிட்டு பொள்ளாச்சி தமிழ்மணி நகரில் அமைந்துள்ள நற்பவி முதியோர் இல்லத்தில் முதியோர் தின விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு திமுக கோவை தெற்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் சேரன் நகர் சுரேஷ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நற்பவி அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் தமிழ்ச்செல்வி அவர்கள் தலைமை வைத்தார். மேலும் முதியவர்களுக்கு இனிப்புகள், புத்தாடைகள் வழங்கியும் அவர்களிடம் ஆசி பெற்றும் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது.