தஞ்சாவூர். ஜூன்.16
தஞ்சாவூர் அருகே கரந்தை பாலோபவ நந்தவனத்தில் உள்ள தென்பழனி கருவூரார் சத்யநாரா யண சித்தர் ஆசிரமத்தில் ஆயில்ய வழிபாடும், சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் வழிபாட்டு குழு தலைவர் யோகம்.செழியன் வரவே ற்றார் . தஞ்சாவூர் காமாட்சி மெடிக்கல் சென்டர் நிர்வாக இயக் குனர் டாக்டர். இனியன் முன்னிலை வகித்தார் . தத்தாத்ரேய சுவாமிகள் “ஷீரடியின் வேரடி ‘ என்ற தலைப் பில் சொற்பொழிவாற்றினார். முன்னதாக சித்தருக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடந்தது. உபயதாரர்கள் ,ஆயில்ய வழிபாட்டுக்குழுவினர் கலந்து கொண்டனர் . நிகழ்ச்சியை ஜெய்கீதா தொகுத்து வழங்கினார் நிறைவாக செல்லத்துரை, செயலாளர் ராகவ் மகேஷ் நன்றி கூறினார்கள்.
நிகழ்ச்சியில் சாந்த குமாரசா மிகள் ஆசியுரை வழங்கினார் மருத்துவர்கள் சிவராஜ் ,சிவ விக்னேஷ் , உலக திருக்குறள் பேரவை செயலர் மாறவர்மன், தென்னங்குடி சண்முகசுந்தரம், பாம்பே ஸ்வீட்ஸ் சுப்ரமணிய சர்மா கவிஞர்கள் விசுவநாதன் பாலதுரையரசன் ,பாலகிருஷ்ணன் அமுதா சில்க்ஸ் பிரகாஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்