கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில், தமிழ்வளர்ச்சித் துறையின் சார்பில், தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வார விழாவையொட்டி, ஆட்சிமொழிச் சட்டவார விழிப்புணர்வு பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் .அ.சாதனைக்குறள் அவர்கள், கொடியசைத்து துவக்கி வைத்து, பேருந்துகளில் விழிப்பணர்வு ஒட்டுவில்லையை ஒட்டினார்.
தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் தமிழ் ஆட்சிமொழித் திட்டத்தை முனைப்புடன் செயல்படுத்தும் நோக்கில் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956-ஆம் நாளை நினைவு கூரும் வகையில் கிருட்டினகிரி மாவட்டத்தில் தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வாரவிழா 18.12.2024 அன்று தொடங்கியது. கல்லூரி மாணவர்களின் ஆட்சிமொழிச் சட்டவார விழிப்புணர்வுப் பேரணிநடைபெற்றது.
இப்பேரணி கிருட்டினகிரி புதிய பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கி காந்தி சிலை வரை முடிவடைந்தது. இப்பேரணியில், கிருட்டினகிரி அரசு மகளிர் கல்லூரி மாணவிகள், அரசு ஆடவர் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர். கிருட்டினகிரி தேன்தமிழ் நாட்டியாலயா பள்ளி மாணவிகளின் பரதநாட்டியம் நிகழ்ச்சியும், கிருட்டினகிரி அரசு இசைப்பள்ளி மாணவர்களின் மிருதங்கம், நாதஸ்வரம் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து, மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள், ஆட்சிமொழிச் சட்டவார விழாவையொட்டி நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் சிறப்பாக நடனமாடிய மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் (சேலம் மண்டலம்.வே.ஜோதி, கிருட்டினகிரி கம்பன் கழகம், தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், துறை சார்ந்த அலுவலர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.