மதுரை கோ.புதூர்.
அல் அமீன் மேல்நிலைப் பள்ளியில் NSS இயக்கத்தின் சார்பாக முன்னாள் இந்திய குடியரசு தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு போதை ஒழிப்பு விழிப்புணர்வு, மத நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவம் சம்பந்தமாக பள்ளித் தலைமை ஆசிரியர் ஷேக் நபி தலைமையில் மாணவச் செல்வங்கள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த விழாவில்
பாத்திமா மைக்கேல் பொறியியல் கல்லூரியின் மூத்த வேதியியல் துறை பேராசிரியர் ராமலிங்கம் மாணவர்களுக்கு எதிர்காலத்தில் உயர் கல்வியின் அவசியம் குறித்து சிறப்புரையாற்றினார். இதில் உதவித் தலைமை ஆசிரியர்கள் ஜாகிர் உசேன், ரஹ்மத்துல்லாஹ், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் செய்யது முகமது யூசுப் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.