*தேசிய பத்திரிக்கை தினம் அனுசரிப்பு திருப்பூர் மாவட்டம் சிக்கண்ணா கலைக் கல்லூரியில்.*
நவ. 17
மாணவர்கள் பத்திரிக்கைகளை நேசித்து, வாசிக்க பழகிக் கொள்ள வேண்டும்.
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி, நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக தேசிய பத்திரிக்கை தினத்தை முன்னிட்டு கருத்துரை வழங்கப் பட்டது. நிகழ்வில் மாணவப் பிரதிநிதி கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார். அவர் பேசுகையில், பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா தொடங்கப்பட்ட இந்நாளில் வருடாவருடம் தேசிய பத்திரிக்கை தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஜனநாயகத்தின் நான்காவது தூணாக பத்திரிக்கை மற்றும் ஊடகம் விளங்குகிறது. மக்கள் பிரச்சினைகளை சுதந்திரமாக பிரசுரம் செய்து அரசின் கவனத்திற்கு எடுத்து சென்று அவற்றை தீர்ப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. மக்களுக்கு தேவையான தகவல்களை நேர்மையாக வழங்கி ஊழல் மற்றும் குற்றங்களை அம்பலபடுத்துவதோடு நிற்காமல், குரலற்றவர்களின் குரலாக பத்திரிக்கை செயல்படுகிறது. மேலும் மாணவர்கள் நேசித்து பத்திரிக்கை களை வாசிக்க வேண்டும். அவ்வாறு செய்வோமானால் புத்தகங்களை படிக்கும் பழக்கம் தானாக ஏற்படும், போட்டி தேர்வுக்கு தேவையான சில குறிப்புகளை பத்திரிக்கையிலிருந்து எடுத்து கொள்ளலாம். குறைந்தது 30 நிமிடமாவது பத்திரிக்கைகளை வாசிக்க வேண்டும் என்று கூறினார். பிறகு மாணவச் செயலர்கள் மது கார்த்திக், நவீன் குமார், ஜெயலட்சுமி, விஸ்வ பாரதி ஆகியோர் தலைமையில் மாணவர்களுக்கு பத்திரிக்கைகளை கொடுத்து வாசித்தனர்.