மார்த்தாண்டம், டிச- 26
மார்த்தாண்டம் அருகே காஞ்சிர கோடு பகுதி சேர்ந்த 29 வயது இளம்பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். இந்த பெண்ணின் உறவினர் பிரான்சிஸ். இவர் நெல்லை மாவட்டத்தில் கல்குவாரி நடத்தி வருகிறார். அங்கு அந்த பெண் வேலை பார்க்கிறார். அப்போது இருவரும் நெருக்கமாக இருந்ததை பிரான்சிஸ் வீடியோ பதிவு செய்து வைத்திருந்தார்.
இந்த நிலையில் பிரான்சிசுக்கு இளம்பெண் 3 லட்சம் பணம், 5 பவுன் நகை கொடுத்துள்ளார். அதை திருப்பி கேட்ட ஆத்திரத்தில் பிரான்சிஸ் வெளிநாட்டில் இருக்கும் அந்த இளம் பெண்ணின் கணவருக்கு, இருவரும் ஒன்றாக இருந்த ஆபாச வீடியோவை அனுப்பி வைத்துள்ளார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண்ணின் கணவர் வெளிநாட்டில் இருந்து வந்து பெண்ணை தாக்கி உள்ளார். இந்த சம்பவத்துக்கு பிரான்சிசின் மனைவி வனஜகுமாரி என்பவரும் மற்றும் ஒரு நபர் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து அந்த பெண் மார்த்தாண்டம் மகளிர் போலீசில் புகார் செய்தார். மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.