தென்தாமரைகுளம்., செப். 29.
குமரிமாவடம் தென் தாமரை குளம் அரசு தொடக்கப்பள்ளியில் ஊட்டச்சத்து உணவு திருவிழா கண்காட்சி மற்றும் போட்டி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவி ஜில்லி ஆல்வின் தலைமையில் நடைபெற்றது. தலைமையாசிரியர் ஸ்டெல்லா நேவிஸ் அனைவரையும் வரவேற்றார். குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சித்ரா மேரி சிறப்பு விருந்தினராக வருகை தந்து குத்துவிளக்கு ஏற்றி போட்டியை தொடங்கி வைத்தார்.தென்தாமரைகுளம் எல். எம். எஸ் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் கால்வின் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி வாழ்த்திபேசினார். பள்ளி மேலாண்மை குழு தலைவி அகல்யா தேவி, கல்வியாளர் டாக்டர் சேகர், உள்ளாட்சி பிரதிநிதி எட்வின் ராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினர். விழா ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர். விழாவில் ஏராளமான பெற்றோர்கள் ஏராளமான ஊட்டச்சத்து உணவுகளை தயார் செய்து காட்சிப்படுத்தி இருந்தனர், பள்ளி மாணவர்கள் உணவுகளை சுவைத்து மகிழ்ந்தனர்.