மேல நீலித நல்லூர் :ஜீன்:30
மேலநீலிதநல்லூர் வட்டாரத்தைச் சார்ந்த தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு திருமலாபுரம் வட்டார வள மையத்தில் வைத்து இரண்டு நாட்கள் எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற்றது.
4 மற்றும் 5 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு ஜூன் ஆகிய இரண்டு நாட்கள் பயிற்சி நடைபெற்றது.
இந்த பயிற்சியினை வட்டார வளமைய பொறுப்பு மேற்பார்வையாளர் பிரதாப் தொடங்கி வைத்தார். வட்டார கல்வி அலுவலர்கள் முத்துலட்சுமி மற்றும் கவிதா ஆகியோர் பயிற்சியின் நோக்கம் குறித்து உரையாற்றினர். ரெங்கசமுத்திரம் ஆர்.சி. தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் அலெக்ஸ், சின்ன கோவிலாங்குளம் நடுநிலைப்பள்ளி பச்சமால், திருமலாபுரம் சான்றோர் தொடக்கப்பள்ளி சரோஜினி, கடையாலுருட்டி இந்து நாடார் நடுநிலைப்பள்ளி அரவிந்தராஜ் மற்றும் மாவட்ட கருத்தாளர் அருள்சிங் ஆகியோர் பயிற்சி அளித்தனர். இதில் 71 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
மாநில கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவன துணை இயக்குனர் சாந்தி மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் கோல்டா ஆகியோர் வியாழன் அன்று பயிற்சியை பார்வையிட்டனர்
முன்னதாக ஜூன் 25, 26 தேதிகளில் 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சி நடைபெற்றது. இதில் சுப்பையாபுரம் தொடக்கப்பள்ளி ஆரோக்கியராஜ், பூவலிங்கபுரம் தொடக்கப்பள்ளி முத்துலட்சுமி, வல்லராமபுரம் தொடக்கப்பள்ளி பார்வதி, வேலப்பநாடாரூர் ராமர் நடுநிலைப்பள்ளி புஷ்பவல்லி ஆகிய ஆசிரியர்கள் பயிற்சி அளித்தனர்.இதில் 81 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்
பயிற்சிக்கான ஏற்பாடுகளை பொறுப்பு மேற்பார்வையாளர் பிரதாப் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் சுரேஷ், செந்தாமரைகண்ணன், கற்பகச்செல்வி, முத்துசரோஜினி ஆகியோர் செய்திருந்தனர்.