முதுகுளத்தூர் அக் 03
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் 7 நாள் சிறப்பு முகாம் மு.தூரி கிராமத்தில் நடைபெற்று வருகிறது
அந்த வகையில் 4-வது நாளன்று சிறப்பு மருத்துவ முகாம் மு.தூரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இந்த
முகாமிற்கு வருகை தந்த
கீழத்தூவல் அரசு, ஆரம்ப சுகாதார நிலையத்தின் வட்டார, மருத்துவர் டாக்டர் நெப்போலியன் தலைமை
யிலான மருத்துவ குழுவினரை என்.எஸ் .எஸ் திட்ட அலுவலர் மங்களநாதன் வரவேற்றார். மருத்துவ குழுவினர்
பொது மக்களுக்கு ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில் சக்கரையின் அளவு உட்பட முழு உடல், பரிசோதனைகள் செய்து பொது மருத்துவச் சிகிச்சை அளித்து , மாத்திரை மருந்துகள் வழங்கி, விழிப்புணர்வு ஆலோசனை வழங்கினார்கள். இதில் சுகாதார ஆய்வாளர் நேதாஜி உட்பட
கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.