சென்னை, நவ-29 , டாக்டர் அம்பேத்கர் ஜனநாயக பேரவை தலைவர் புத்திஸ்ட் ஜே.பி.நாகபூஷணம் தமிழ்நாடு தலைமை செயலாளர் அவர்களுக்கு சட்ட அறிவிப்பு நகலை அனுப்பியுள்ளார். “
இந்த அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
வேங்கை வயல், கள்ளக்குறிச்சி மற்றும் பஞ்சமி நிலம் ஆகியவற்றின் முழு விவரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கையை கேட்டு, 9 பட்டியலின அமைப்புகளின் சார்பில், கடந்த செப்டம்பர் மாதம் 20ஆம் தேதியும் அக்டோபர் மாதம் 07,16 ஆகிய தேதிகளில் மின்னஞ்ல் மற்றும் விரைவு தபால் மூலமாக மனுக்களை தமிழ்நாடு தலைமை செயலாளாருக்கு அனுப்பியுள்ளதாகவும், அதற்கு இதுவரையில் எந்தவித பதிலையும் வழங்கவில்லையென்றும், மேலும் நேரில் பேசுவதற்காக நேரம் கேட்டும் அதற்கும் பதில் வழங்கவில்லை.
இந்த விவகாரம் குறித்து சென்னை உயர்நீதிமன்ற
சட்டரீதியான ஆணைப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டும் பலனில்லை
ஆகவே, இந்த கடிதம் கிடைத்த 15 நாட்களுக்குள் எங்களின் கோரிக்கைகளுக்கு பதில் வழங்க தவறும் பட்சத்தில் அவர்களின் பதில் திருப்தி அளிக்காவில்லை என்றாலும், தாங்கள் கடமையிலிருந்து தவறியுள்ளீர்கள் என்று கருதப்பட்டு நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ள இதுவே ஆவணமாகிவிடும் என்றும், அதற்காக வேலை இழப்பு, வீண் செலவினங்கள், வருமான இழப்பு, மன உளைச்சல் ஆகியவற்றுக்கு நீங்களே தார்மீக பொறுப்பு ஏற்க நேரிடும் என்று நினைவூட்டப்படுகிறது”. என்று இந்த அறிவிப்பில் உள்ளது.