ஈரோடு மே 10
தலித் விடுதலை கட்சி சார்பில் ஈரோடு பன்னீர் செல்வம் பார்க்கில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது இதன்பிறகு சுமார் 100 பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் மற்றும் எழுது பொருட்கள் வழங்கப்பட்டன தலித் விடுதலை கட்சியின் மாநில அமைப்பாளர் ஆறுமுகம் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் சமுதாய நல அறக்கட்டளை தலைவரும் முன்னாள் கவுன்சிலருமான விநாயக மூர்த்தி கலந்து கொண்டு நோட்டு புத்தகங்களை வழங்கினார் இதில் ஆதி தமிழர் முன்னேற்றக் கழக துணை பொது செயலாளர் வீரக்குமார் மேற்கு மண்டல செயலாளர் செல்வம் ஈரோடு மாவட்ட அமைப்பாளர் விஜயலட்சுமி மற்றும் கோபி உட்பட பலர் கலந்து கொண்டனர்.