நாகர்கோவில் அக் 15
கன்னியாகுமரி மாவட்ட பேரிடர் மேலாண்மை தலைவர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் செயல்முறை ஆணைபடி பேச்சிப்பாறை அணை வெள்ள அபாய அளவான 43.00 அடியை கடந்து நேற்று 43.85 அடியை எட்டியுள்ளது. அணை நீர்மட்டம் அதிக மழையினால், நீர் உள்வரத்து காரணமாக நேற்று (14.10.2024) மாலை 6.00 மணியளவில் வினாடிக்கு 250 கனஅடி உபரிநீர் பேச்சிப்பாறை அணையிலிருந்து கோதையாற்றில் திறந்துவிடப்பட உள்ளதால் களியல், திற்பரப்பு, மூவாற்றுமுகம், குழித்துறை வழியாக தேங்காய்பட்டணம் கடலில் சென்று சேரும்.
எனவே கோதையாறு, தாமிரபரணி ஆற்றுக்கரையோரமாக வசிக்கும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையுடன் இருப்பதோடு, ஆற்றோரப் பகுதியில் குளிப்பதை முற்றிலும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா தனது பத்திரிக்கை செய்தியில் தெரிவித்துள்ளார்.