நாகர்கோவில் அக் 16
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவக வருவாய் கூட்டரங்கில் எதிர்வரும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவகர்களுடனான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் புதிய திருப்பூர் வட்டார வளர்ச்சி கழகம், சென்னை நிர்வாக இயக்குநர் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஹனீஷ் சாப்ரா கலந்து கொண்டு. துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்
கன்னியாகுமரி மாவட்டத்தில் எதிர்வரும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக
மாவட்டத்தின் நீர் ஆதாரமான பேச்சிப்பாறை பெருஞ்சாணி அணைப்பகுதிகள் அருகாமையிலும். தாழ்வான பகுதிகள், ஆறுகள், குளங்கள். வாய்க்கால்கள். நீர்நிலைகளின் அருகில் உள்ள பகுதிகளையும். ஓகி புயலில் போது அதிகம் பாதிக்கப்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளிட்ட பகுதிகளை கண்காணிக்க வேண்டும். வெள்ளபெருக்கினால் ஆறுகள், குளங்கள் உடைப்பு ஏற்படாமல் இருக்க நீர்வளத்துறை மற்றும் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் இணைந்து செயல்பட வேண்டும்.
கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்களுக்கு உரிய முறையில் அறிவிப்பு கொடுக்க வேண்டும் அணைகளிலிருந்து உயரிநீர் திறந்து விடும்போது ஆறுகள் குளங்கள் வாய்க்கால்கள் விளைநிலங்களிலும் பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மேலும் பொதுமக்களுக்கு உபரிநீர் திறப்பதற்கு முன்பாகவே உரிய முன்னறிவிப்புகள் வழங்க வேண்டும். உபரிநீர் வெளியேற்றும் போது அந்தத்த பகுதி உள்ளாட்சி அமைப்புகள். உள்ளாட்சி பிரதிநிதிகள். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்டவர்கள் இவற்றினை கண்காணித்து உறுதிசெய்ய வேண்டும். கடந்த காலங்களில் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகள், தாழ்வான பகுதிகளில் நீர்நிலைகளின் அருகாமையில் உள்ள பொதுமக்கள், கர்ப்பிணி தாய்மார்கள், கால்நடைகளை பாதுகாப்பான தங்கும் இடங்களில் தங்க வைத்து அவர்களுக்கு உரிய உணவு குடிநீர், பால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வழங்குவதோடு மருந்துகள் இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும் எனவும், மீன்பிடி துறைமுகங்களிலுள்ள படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைக்க உரிமையாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். மீனவர்களின் படகுகள், கட்டுமரங்கள் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளதா என கண்காணிக்க வேண்டும். தீயணைப்பு துறையினர் அதிகளவு மீட்பு பணியில் ஈடுப்படுவதோடு, பைபர் படகு. டார்ச், ரம்பம் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களும் தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். மழைக்காலங்களில்
அதிகளவு பாதிக்கப்பட்ட பகுதிகளான மீனாட்சி கார்டன், ஊட்டுவாழ்மடம், குழித்துறை, தாமிரபரணி ஆறு பகுதிகளில் உள்ள பொதுமக்களை முன்னதாகவே பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வேண்டும். மேலும் அப்பகுதிகளில் உள்ள ஓடைகள், நீர்வரத்து பகுதிகளில் அடைப்பட்டுள்ள புதர்களை அகற்றி நீர்வழித்தடங்களை சீரமைத்திட வேண்டும்.
காவல்துறையில் மீட்புபணியில் ஈடுப்படவுள்ள வீரர்களை கண்டறிந்து தயார்படுத்துவதோடு, நீச்சல் தெரிந்த வர்கள் தன்ணர்வலர்கள் உள்ளிட்டவரையும் தயார்படுத்திட அறிவுறுத்தப்பட்டது. மேலும் தோவாளை, கிள்ளியூர், விளவங்கோடு. கல்குளம். அகஸ்தீஸ்வரம் திருவட்டார் உள்ளிட்ட வட்டங்களுக்குட்பட்ட பகுதிகளில் குளங்கள் உடைப்பு ஏற்பட்டு பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அப்பகுதி மக்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகளை தடுக்கும் வகையில் உரிய மருத்துவ சிகிச்சைகள் வழங்க மருத்துவர்கள் செவிலியர்கள் அவசர சிகிச்சை பிரிவுகள், மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் தயார் நிலையில் இருப்பதோடு, மாவட்டத்தின் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மழை வெள்ள பாதுகாப்பு தங்கும் மையங்களிலும் மருந்து மாத்திரைகள், மருத்துவர் செவிலியர்கள் உள்ளிட்டவைகள் தயார் நிலையில் இருப்பதோடு, இருப்பு வைக்க வேண்டும் குறிப்பாக ஒவ்வொரு கூட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் கர்ப்பினி பெண்களை கண்டறிந்து பேரிடர் காலங்களில் அவர்களை அருகாமையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தி. பொது சுகாதாரத்துறை. மருத்துவ துறை உள்ளிட்ட அலுவகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
நெற்பயிர்கள்,விவசாய நிலங்கள் மலரியல் செடிகள் பாதிக்கமால் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களுக்கு தங்குத்தடையின்றி குடிநீர் வழங்கிட உரிய நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு மின்வாரிய இடையூறாக உள்ள மரக்கிளைகளை அகற்ற வேண்டும். சாலை ஓரங்கள் மற்றும் நீர் நிலைகளில் மின்கம்பிகள் அறுந்து கிடக்கிறதா என பணியளர்களும் வாயிலாக கண்காணிப்பதோடு, உடனடி நடவடிக்கை மேற்கொண்டு மின்சாரம் தடையின்றி கிடத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் மழை வெள்ள பாதிப்பு சேதங்கள் தொடர்பான 24 மணி நேரமும் இயங்கும் மாவட்ட கட்டுப்பாட்டு அறை கட்டணமில்லா தொலைப்பேசி எண் 1077 என்ற எண்ணிற்கும் 04652 231077, 9384050205 ஆகிய எண்களுக்கு தொடர்புகொண்டு பொதுமக்கள் புகார்களை தெரிவிக்கலாம் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷந்த் கிருஷ்ணா, பத்மநாபபுரம் உதவி ஆட்சியர் வினய்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சுகிதா, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் காளீஸ்வரி, வட்டாட்சியர்கள் முருகன், ஜீலியன், கோலப்பன், ராஜசேகர், சஜத், கந்தசாமி மற்றும் துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.