வேலூர்=04
வேலூர் மாவட்டம், வேலூர் காந்திநகர் ஹோட்டல் அர்ச்சனாஸ் ஹாலில் பிற்படுத்தப்பட்டோர் ,மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு வடக்கு மண்டல கலந்தாய்வு கூட்டம் வடக்கு மண்டல தலைவர் SRFBC டாக்டர் மு. ராஜமாணிக்கம், தலைமையிலும் வடக்கு மண்டல ஆலோசகர் எல். சடகோபு ராமானுஜம், வேலூர் மாவட்ட தலைவர் 7G எஸ் .முரளிதரன், மாவட்ட பொருளாளர் ச. பார்த்திபன் ,ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது வேலூர் மாவட்ட செயலாளர் ஆர் .ஸ்ரீநாத், வரவேற்புரையாற்றினார் .சென்னை டாக்டர் காந்தையா வடக்கு மண்டல பொருளாளர் பாலாஜி, வடக்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் எம். சி .லோகு, மத்திய மண்டல செயலாளர் சரவணதேவா ஆகியோர் சிறப்புரையாற்றினர் .விழாவில் போயர் சங்கத் தலைவர் பி. வெங்கடேசன், கல்வியாளர் ஜனார்த்தனன், ராமகிருஷ்ணன், ராஜேந்திரன், கோபி கோபால் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர் வேலூர் மாவட்ட இளைஞரணி என். ஜெகஜீவன் நிகிழ்ச்சியின் நிறைவாக நன்றி உரையாற்றினார்.