ஊட்டி.டிச. 15.
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூரில் கனமழை கொட்டி வருகிறது. குறிப்பாக நேற்று காலை முதல் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகள் மற்றும் நீரோடைகள் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ரயில் பாதையில் சரிந்து ரயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே குன்னூர் மலைப்பாதையில் உள்ள பரப்பாலம் என்னும் பகுதியில் ராட்சத மரத்தின் ஒரு பகுதியானது ரூ.4.10 லட்சம் மதிப்பீட்டில் அங்கு அமைக்கப்பட்டிருந்த டிரான்ஸ்பார்மர் மேல் விழுந்ததை தொடர்ந்து முற்றிலுமாக சேதமானது இதனால் மரப்பாலம் பகுதியில் உன் குடியிருப்புகளுக்கு மின் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. தகவல் அறிந்த மாவட்ட மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் சேகர் மற்றும் குன்னூர் நகர உதவி செயற்பொறியாளர் ஜான்சன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டதோடு மின்வாரிய ஊழியர்களுடன் அப்பகுதி மக்களின் நலன் கருதி மாற்று டிரான்ஸ்பார்மர் பொருத்தப்பட்டு கிராமத்துக்கு மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கன மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது.