தென்காசியில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த தென்காசி மாவட்டம் ஆலங்குளம், கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், தென்காசி ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான செயலாளர், தலைவர், மகளிர் சங்க செயலாளர், தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் நியமன பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் சீதாராமன் தலைமை தாங்கினார். மத்திய மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து, மாவட்ட தலைவர்கள் குலாம், சுரேஷ்குமார், மாநில துணைத் தலைவர்கள் அய்யம் பெருமாள் பிள்ளை, திருமலைக்குமாரசாமி யாதவ், மாநில செயற்குழு உறுப்பினர்கள் சேது, அரிகரன், சாகுல் ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில தலைவர் ஆலயமணி, பாட்டாளி இளைஞர் சங்க மாநில செயலாளர் முருகசாமி, மாநில மாணவர் சங்க தலைவர் கோபிநாத் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினர். அப்போது மருத்துவர். ராமதாஸ் மற்றும் மருத்துவர்.அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் ஆலோசனையின் படி தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட ஐந்து சட்டமன்ற தொகுதிகளிலும் உடனடியாக நிர்வாகிகளை நியமிப்பதற்கு விரைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் 2026 ஆம் ஆண்டு மருத்துவர் அன்புமணி ராமதாசை முதல்வராக்க அனைவரும் பாடுபட வேண்டும் தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட 33 வார்டுகளிலும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை விரைந்து செய்திடக் கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மேலும் இந்த கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர்கள் ராஜேந்திரன், மகாதேவன், மாவட்ட அமைப்பு செயலாளர் சிங்கராயன், தென்காசி ஒன்றிய தலைவர் தண்டபாணி, ஒன்றிய செயலாளர் கருப்பசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். தென்காசி நகரச் செயலாளர் சங்கரநாராயணன் நன்றி கூறினார்.