பரமக்குடி,ஏப்.3: பரமக்குடி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வேண்டாம் அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம் என பாஜக நிர்வாகியால் ஒட்டப்பட்டுள்ள நோட்டீசால் பரபரப்பு ஏற்பஷோஷோடுத்தியுள்ளது.!!
தமிழகத்தில் திமுக கூட்டணி பலமாக உள்ளதால், திமுகவை சமாளிக்க பாஜக மெகா கூட்டணியை உருவாக்குவதற்கு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில்,அதிமுக ,பாஜக உடன் கூட்டணி ஏற்படுத்தி கடந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியை சந்தித்தது. அதன் பிறகு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் அதிமுக மூத்த நிர்வாகிகளுக்கு இடையே ஏற்பட்ட முரண்பாட்டால் அதிமுக பாஜக கூட்டணியில் இருந்து விலகியது. இதனைத் தொடர்ந்து, பாஜக அதிமுக இடையே கடும் மோதல் தொடர்ந்து வந்த நிலையில், பாஜக மூத்த நிர்வாகிகள் உள்துறை அமைச்சருமான அமிர்ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் சந்தித்தனர். மாநிலத் தலைவராக அண்ணாமலை தொடர்ந்தால் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைவது கடினம் அதிமுக சார்பில் தெரிவித்ததாக தெரிகிறது. இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் மூத்த நிர்வாகி செங்கோட்டையினையும் அமிர்ஷா சந்தித்து பேசினார்.இந்த நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நீக்கிவிட்டு புதிய தலைவரை நியமிக்க பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது. இதனை ஏற்றுக் கொள்ளாத பாஜக நிர்வாகிகள் தொடர்ந்து அதிமுகவுடன் கூட்டணியே வேண்டாம் என தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்ட பாஜக செயலாளர் பரமக்குடி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வேண்டும் வேண்டும் அண்ணாமலை வேண்டும் அதிமுக கூட்டணி வேண்டாம் என்ற வாசகத்துடன் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் ராமநாதபுரம் மாவட்டம் பாஜகவில் சலசலப்பு அதிகரித்து வருவதுடன்,பாஜக அதிமுக கூட்டணிக்கு கடும் எதிர்ப்பு நோட்டீஸ் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
படம்.
பரமக்குடியில் பாஜக மாவட்ட செயலாளர் அதிமுக கூட்டணி வேண்டாம் என ஒட்டப்பட்டுள்ள நோட்டீஸ் நோட்டீஸ்.