மதுரை மார்ச் 26,
முல்லை பெரியார் குடிநீர் திட்டத்திற்கு
வீட்டு இணைப்புகள் வழங்குவதற்கு எந்தவித கட்டணமும் பொதுமக்கள் செலுத்த வேண்டாம் – மாநகராட்சி அறிவிப்பு
மதுரை மாநகருக்கு அம்ரூத் திட்டத்தின் கீழ் முல்லை பெரியாறு லோயர் கேம்ப் பகுதியிலிருந்து குடிநீர் வழங்குவதற்காக பல்வேறு மேம்பாட்டு திட்டப் பணிகளான முல்லை பெரியாறு லோயர் கேம்ப் பகுதியில் தடுப்பணை, ஆற்று நீரேற்று நிலையம் அமைத்தல், பண்ணைப்பட்டியில் 125 எம்.எல்.டி. குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல், பண்ணைப்பட்டியில் இருந்து மதுரை மாநகர் வரை குடிநீர் பிரதான குழாய் பதித்தல், குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள் கட்டுதல், மாநகராட்சியின் அனைத்து வார்டு பகுதிகளில் குடிநீர் விநியோக குழாய்கள் பதித்தல் மற்றும் வீட்டு இணைப்புகள் வழங்குதல், உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதுரை மாநகராட்சியின் சார்பில் குடிநீர் குழாய்கள் பதிப்பதற்கும், வீட்டு இணைப்புகள் வழங்குவதற்கும் எந்தவித கட்டணமும் பொதுமக்கள் செலுத்த வேண்டியது இல்லை. வீட்டு இணைப்புகளுக்கு வைப்புத் தொகை மட்டுமே குடியிருப்புதாரர்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டும். குடிநீர் விநியோகத்திற்கு பிறகு குடியிருப்புதாரர்கள் குடிநீர் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு கட்டணம் செலுத்தப்பட வேண்டும். எனவே மதுரை மாநகராட்சி பகுதிகளில் குடியிருக்கும் பொதுமக்கள் முல்லை பெரியார் குடிநீர் திட்டத்திற்கு யாரேனும் கட்டணம் செலுத்த கோரினால் மாநகராட்சியின் 24 நேர கட்டுப்பாட்டு அறை எண்.7871661787 என்ற எண்ணில் வாட்ஸ் அப் மூலமாகவோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ புகார் தெரிக்குமாறு மதுரை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.