இ- பாஸ் முறையை ரத்து செய்யக் கோரி நீலகிரி மாவட்டத்தில் கடை அடைப்பு பந்த்.
நீலகிரி மாவட்டத்தில் இ – பாஸ் நடைமுறையை ரத்து செய்யக்கோரி வணிகர்கள் சார்பில் நீலகிரி மாவட்டம் முழுவதும் ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சுற்றுலா வாகன ஓட்டுநர்கள், வாகனங்களை இயக்கவில்லை இதனால் மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு ரயில் நிலையம், அம்மா உணவகங்களில் உணவுக்காக மக்கள் குவிந்தனர். 13 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற கோரியும் ஒரு நாளைக்கு 6000 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி போன்ற காரணங்களை எதிர்த்து ஒரு நாள் கடையடைப்பு நடைபெற்றது. இணைய சேவை பாதிக்கப்பட்டதால் சோதனை சாவடிகளில் இ – பாஸ் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டதால் பல வாகன ஓட்டுனர்கள் பாதிப்படைந்தனர். ஊட்டி, குன்னூர் , கோத்தகிரி, கூடலூர் பகுதி சுற்றுலா தளங்கள் சுற்றுலா பயணிகள் வரவின்றி காட்சியளித்தன. கடை தெருக்கள் வெறிச்சோடி காணப்பட்டன. மருந்தகங்கள், ஆவின் பாலகங்கள் போன்ற முக்கிய அத்தியாவசிய நிறுவனங்கள் மட்டும் திறக்கப்பட்டு இருந்தன. நீலகிரி மாவட்ட சுற்றுலா சூழலை பாதுகாக்கவும், நீலகிரி மாவட்டத்தில் வாகன பெருக்கத்தை கட்டுப்படுத்தவும் இ – பாஸ் நடைமுறை ஏற்படுத்தியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. சுற்றுலா பயணிகளின் வரவின்றி வணிகரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருந்தாலும் இ – பாஸ் நடைமுறையால் வாகனங்கள் கட்டுப்படுத்தப்பட்டிருப்பது நல்லது என பலர் கருத்தும் தெரிவித்துள்ளனர்.