ஊட்டி. பிப். 15.
தமிழகத்தின் பல மாவட்டங்களில் உள்ள திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர்கள் அவர்களின் பொறுப்புகளின் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டு புதிய மாவட்ட பொறுப்பாளர்களாக திமுக மாநில பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமையில் புதிய மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அதன் அடிப்படையில் நீலகிரி மாவட்ட திமுக மாவட்ட பொறுப்பாளராக கோத்தகிரி பகுதியை சேர்ந்த கே எம் ராஜு என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே மாவட்ட செயலாளர் பதவியில் இருந்த பா. மு. முபாரக் அந்த பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு அவருக்கு பதிலாக மாவட்ட செயலாளராக கே எம் ராஜீ நியமிக்கப்பட்டுள்ளார் இவர் துவக்க காலத்தில் இளைஞரணி துணை அமைப்பாளராகவும் , அதனை தொடர்ந்து அமைப்பாளராகவும் பின்னர் மாவட்ட பிரதிநிதி பதவியை வகித்துள்ளார். இதனை தொடர்ந்து 13 ஆண்டுகளாக ஒன்றிய செயலாளராகவும் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பொதுக்குழு உறுப்பினர் தலைமை செயற்குழு உறுப்பினர் என கட்சியின் முக்கிய பதவிகளை வகித்துள்ளார். மேலும் கட்சி சார்பில் நடத்தப்பட்ட அனைத்து போராட்ட போராட்டங்களிலும் கலந்து கொண்டு சிறை சென்றுள்ளார். தற்போது மாவட்ட திமுக பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கே எம் ராஜ்க்கு கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். புதிய பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ள கே எம் ராஜ செய்தியாளர்களிடம் குறிப்பிடும்போது தமிழகத்தின் கலைஞருடைய ஆசீர்வாதத்துடனும் தளபதி அவர்களின் பொற்கால ஆட்சி சிறப்பாக நடந்து வருகின்ற இந்நேரத்தில் தளபதியாரின் ஆசியுடனும் கட்சியின் மீது rள்ள செயல்பாடுகளின் காரணத்தினால் தனக்கு இப்பொறுப்பு கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார் நீலகிரி மாவட்ட பொறுப்பாளராக நியமனம் செய்த கழகதாபதி அவர்களுக்கும் பொது செயலாளருக்கும் தலைமை அரசு கொறடக ராமச்சந்திரன் மற்றும் கட்சியின் மாவட்ட முக்கிய நிர்வாகிகள் நகர |ஒன்றிய, செயலாளர்கள் கிளை செயலாளர்கள் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகி களுக்கும் நன்றியை தெரிவித்துகொண்டார் கட்சியின் புதிய மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கபட்டுள்ள கே.எம்.ராஜீ அவர்களுக்கு தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து மாவட்ட முழுவதும் பட்டாசு வெடித்துகொண்டாடி மகிழ்ந்தனர்