மதுரை பிப்ரவரி 25,
மதுரை திருப்பரங்குன்றம் கோயிலில் பத்திரிகை வாசிக்கும் நிகழ்வு
மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு பத்திரிக்கை வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தேங்காய் தோடும் முகூர்த்தமும், தேர் முகூர்த்தமும் நடைபெற்றது. தேர் அச்சு செய்யப்பட்டது. பின்னர் கருப்பண்ணசாமிக்கு தீபாராதனை நடைபெற்றது. இத்திருவிழாவானது மார்ச் 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது. மேலும் மார்ச் 16 ஆம் தேதி சூரசம்ஹாரமும், மார்ச் 17 பட்டாபிஷேகமும், மார்ச் 18 திருக்கல்யாணமும், மார்ச் 19 தேரோட்டமும் நடைபெறவுள்ளது. மார்ச் 20 தீர்த்தவாரி உற்சவமும் நடெைபறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.