தென்காசி வடக்கு மாவட்டம், சங்கரன்கோவில் வடக்கு ஒன்றியம், சுப்புலாபுரம் பகுதி கைத்தறி தொழில் நிறைந்த பகுதியாகும் இந்த பகுதியில் கைத்தறியில் உற்பத்தியாகும் துணி வகைகளுக்கு வகைகளை விற்பனை செய்ய மகளிர் குழுவினர் மூலம் ஒரு புதிய கூட்டுறவு சங்கம் அமைத்து தர வேண்டும் என
நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர். தொடர்ந்து இதுகுறித்து வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏவிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த ராஜா எம்எல்ஏ கைத்தறித்துறை அமைச்சர் காந்தியிடம் அனுமதி பெற்று நீண்ட கால கோரிக்கையான அன்னை தெரசா மகளிர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத்திற்கு உரிய அனுமதி பெற்றுத் தந்தார்.
புதிய கூட்டுறவு சங்கம் அமைக்க அனுமதி பெற்று தந்த வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏவை சங்கத்தின் நிர்வாகிகள் நேரில் சந்தித்துஅரசின் அனுமதி கடிதத்தை காண்பித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இங்கு சந்திப்பின்போது சங்கரன்கோவில் தெற்கு ஒன்றிய செயலாளர் லாலா சங்கர பாண்டியன், சங்கரன்கோவில் வடக்கு ஒன்றிய செயலாளர் வெள்ளத்துரை, மாவட்டத் துணைச் செயலாளர் புனிதா, மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் பிச்சையா, மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் சிவசுப்பிரமணியன் சுப்புலாபுரம் கிளை கழக ஒன்றிய பிரதிநிதி மெடோஸ்ஜெயசீலி ,சுப்புலாபுரம் பாக முகவர் முத்துசாமி, சுந்தர் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.