அஞ்சுகிராமம் நவ-18
கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றியம், அஞ்சு கிராமம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய வாக்காளர் சேர்ப்பு முகாம் நடந்தது. அஞ்சு கிராமம் ஜேம்ஸ்டவுண் வாக்குச்சாவடியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கு கீழ்படிந்தும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவுரைப்படியும், கன்னியாகுமரி மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு ஆலோசனை படியும் புதிய வாக்காளர்களை சேர்ப்பதற்காக வாக்கு சாவடி அலுவலர் நெல்சன் அவர்களிடம் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய திமுக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளரும், அஞ்சுகிராமம் பேரூராட்சி துணை தலைவருமான காந்திராஜ் தலைமையில் முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர்கள் எஸ்.பி பாலன், ஜெயக்கொடி ஆகியோர் விண்ணப்பம் படிவங்களை பெற்றனர் மேலும் அஞ்சுகிராமம் பேரூராட்சியில் நடைபெறும் அனைத்து வாக்களார் சேர்ப்பு மையங்களுக்கும் நேரில் சென்று புதிய வாக்காளர்கள், மற்றும் பெயர், முகவரி மாற்றம் செய்தல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்