மதுரை மார்ச் 17,
மதுரையில் புதிய கால்நடை மருத்துவமனையை திறந்து வைத்த அமைச்சர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேரூராட்சியில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் தரம் உயர்த்தப்பட்ட கால்நடை மருத்துவமனையை வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார். உடன் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, சோழவந்தான் எம்எல்ஏ வெங்கடேசன், கால்நடைத் துறை அதிகாரிகள், மருத்துவர்கள் மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.