கடையநல்லூர் ஜன 8
தென்காசி மாவட்டம் முழுவதும் போதையில்லாத மாவட்டமாக அமைய புதிய தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தின் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக அரவிந்த் என்னும் ஐபிஎஸ் அதிகாரி பதவி பொறுப்பேற்உள்ளார் இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் சட்ட விரோத மாக கனிமவள கடத்தல் தாராளமாய் கொடி கட்டி பறக்கிறது அதே போல் கஞ்சா விற்பனை கல்லூரி மாணவர்களிடையே வெகு சுலபமாக கிடைத்து வருவதையும் அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் தெரிந்தே நடக்கிறது கஞ்சா வியாபாரம் குறித்தும் போதை ஆசாமிகளின் உச்சகட்ட அராஜக நடவடிக்கைகள் குறித்தும் அருகருகே உள்ள காவல் நிலையங்களுக்கு தகவல் கொடுத்தாலும் அங்கே நல்ல நேர்மையான அதிகாரிகளுக்கு மத்தியில் ஊடுருவியுள்ள சில கருப்பு ஆடுகள் மூலம் இந்த போதை வியாபாரிகளுக்கும் போதை ஆசாமிகளுக்கும் தகவல் கிடைப்பதோடு மட்டுமின்றி யார் இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தகவல் தருகிறார்களோ அவர்களைப் பற்றியும் தகவல் கொடுத்து வருகின்றனர் இதனால் பல்வேறு சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் ஆங்காங்கே அவ்வப்போது மறைந்து தோன்றினாலும் தொடர்கதை ஆகவே தென்காசி மாவட்டம் முழுவதும் நிலவி வருகிறது கிட்டத்தட்ட இந்த போதை வியாபாரம் தமிழகத்தின் பெரிய நகரங்களுக்கு ஈடு இணையாக தற்போது தென்காசி மாவட்டத்திலும் கோலோச்சி வருகிறது அதேபோல் விபச்சாரங்களும் தங்கு தடையின்றி எந்த வித அச்ச உணர்வுமின்றி தாராளமாய் நடந்து வருகிறது அதே போல் தென்காசியின் மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பெரிய நகரங்களில் போக்குவரத்து நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதிலும் ஆக்கிரமிப்பு அகற்றும் விஷயத்திலும் சம்பந்தப்பட்ட துறைகளோடு காவல்துறை நிர்வாகமும் ரொம்பவே அலட்சியமும் மெத்தனமும் காட்டி வருகிறது எனவே புதிதாய் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கின்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் முதல் கட்டமாக தென்காசி மாவட்டத்தை ஒரு போதை இல்லா மாவட்டமாக ஏற்படுத்திய தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..