மதுரை ஜூலை 12,
மதுரை மாநகராட்சியில் ரூ.142 கோடி மதிப்பீட்டில் புதிய சாலை பணிகளை தொடங்கி வைத்த மேயர்.
மதுரை மாநகராட்சி மண்டலம் 2, வார்டு எண்.23 மற்றும் 27 செல்லுர் 60 அடி சாலை பகுதியில் புதிய சாலைகள் அமைப்பதற்கான பூமி பூஜையை மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் ச.தினேஷ்குமார், வடக்கு சட்டமன்ற உறுப்பினர், கோ.தளபதி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. மதுரை மாநகராட்சி மண்டலம் 2 வார்டு, எண்.23 க்கு உட்பட்ட செல்லூர் 60 அடி சாலை பகுதியில் நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டம் (NSMT 2023-2024) மற்றும் 15வது மத்திய நிதியின் கீழ் (15th CFC) ரூ.62.46 லட்சம் மதிப்பீட்டில் 402 மீட்டர் நீளத்திற்கும் மற்றும் வார்டு எண்.27 பகுதியில் நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டம் (NSMT 2023-2024) மற்றும் 15வது மத்திய நிதியின் கீழ் (15th CFC) ரூ.79,70 லட்சம் மதிப்பீட்டில் 466 மீட்டர் நீளத்திற்கும் என மொத்தம் ரூ.142 கோடி மதிப்பீட்டில் 868 மீட்டர் நீளத்திற்கு புதிய தார் சாலைகள் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. புதிய தார்ச்சாலைகள் அமைப்பதற்கான பூமி பூஜை மேயர் தலைமையில் நடைபெற்று பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது, இந்த ஆய்வின்போது துணை மேயர் தி.நாகராஜன், மண்டலத் தலைவர்கள் சரவண புவனேஸ்வரி, முகேஷ்சர்மா, செயற்பொறியாளர் சேகர், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி செயற்பொறியாளர் காமராஜ், உதவிப் பொறியாளர் பாஸ்கரபாண்டியன், மாமன்ற உறுப்பினர்கள் குமரவேல், மாயத்தேவன் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.