தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்மற்றும் மாண்புமிகு மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திருமதி என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் திருப்பூர் மாநகராட்சி, இரயில் நிலையம் எதிரில் உள்ள தலைமை தபால் நிலைய அலுவலக வளாகத்தில் புதிய தபால் நிலைய பாஸ்போட் சேவா மையத்தினை திறந்து வைத்தார்கள்.
________
ஜன:26
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திருமதி என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவர் தா.கிறிஸ்துராஜ் தலைமையில், திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் மேயர் ந.தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் திருப்பூர் மாநகராட்சி, இரயில் நிலையம் எதிரில் உள்ள தலைமை தபால் நிலைய அலுவலக வளாகத்தில் புதிய தபால் நிலைய பாஸ்போட் சேவா மையத்தினை திறந்து வைத்தார்கள்.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்ததாவது!!
தபால் நிலைய பாஸ்போட் சேவா மையம் திருப்பூரில் 444-வது தபால் அலுவலகமாக இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது மிகுந்த பெரிமைக்குரிய ஒன்றாகும். திருப்பூரில் தபால் நிலைய பாஸ்போட் சேவா மையம் திறந்து வைப்பதன் மூலம் பாஸ்போர்ட் போன்ற அத்தியாவசிய சேவைகள் அனைத்து மக்களுக்கும், எந்த இடத்திலும் கிடைப்பதை உறுதி செய்வதில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது.
பாஸ்போர்ட் தொடர்பான சேவைகளுக்காக பொதுமக்கள் இனி கோயம்புத்தூருக்கு நீண்ட பயணம் மேற்கொள்ள வேண்டியதில்லை. இந்த தபால் நிலைய பாஸ்போட் சேவா மையம் திருப்பூர் மக்களுக்கு சேவைகளை நெருக்கமாகக் கொண்டு வருகிறது, இது பயண நேரத்தையும் காத்திருப்பு நேரத்தையும் கணிசமாகக் குறைக்கிறது. ஆரம்பத்தில், இந்த அலுவலகம் அதாவது தபால் நிலைய பாஸ்போட் சேவா மையம் திருப்பூர் ஒரு நாளைக்கு 40 சந்திப்புகளை வெளியிடுகிறது. மேலும் எதிர்காலத்தில் ஒரு நாளைக்கு 80 சந்திப்புகளாக ஆக உயர்த்தப்படும். இது மாவட்ட மக்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது. இதை ஏற்பாடு செய்த ஒன்றிய மற்றும் மாநில அரசுக்கு மாவட்ட மக்களின் சார்பாக நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
தற்போது, தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி, கோயப்புத்தூர் ஆகிய இடங்களில் 4 மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. கோயம்புத்தூர் அலுவலகத்தின் கீழ், 1 பாஸ்போட் சேவா மையம்
மற்றும் 4 தபால் நிலைய பாஸ்போட் சேவா மையம் செயல்பாட்டில் உள்ளது. தற்போது, திருப்பூரில் திறக்கப்பட்டது 5-வது கிளையாகும். மேலும் வருங்காலத்தில் பொள்ளச்சியில் 01 தபால் நிலைய பாஸ்போட் சேவா மையம் திறக்கப்பட உள்ளது. இவ்வாறு மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில், துணை மேயர் ரா.பாலசுப்பிரமணியம், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலக்குழுத்தலைவர் இல.பத்மநாபன், முதன்மை பாஸ்போட் அலுவலர் (இந்திய வெளியுறவு பணி) கே.ஜே.சீனிவாசா, மேற்கு மண்டல தபால்துறை தலைவர் எ.சரவணன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்…