திருப்பூர், ஆகஸ்ட்.06 திருப்பூர் மாநகரில் போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபிநபு சேலத்துக்கு மாற்றப்பட்டு திருப்பூருக்கு மாநகரத்துக்கு லட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் ஐ.பி.எஸ் அதிகாரிகள், 18 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர். அந்த வகையில் திருப்பூர் போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபிநபு, சேலம் மாநகருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து சென்னை ஆயுதப்படை போலீஸ் ஐ.ஜி.,யாக உள்ள லட்சுமி, ஐபிஎஸ் திருப்பூர் போலீஸ் கமிஷனராக
நியமிக்கப்பட்டுள்ளார்.புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட ஆணையர்
1997 ம் ஆண்டு குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்று டி.எஸ்.பியாக
போலீஸ் துறைக்குள் வந்தார். அதன் பின்னர், ஐ.பி.எஸ். அதிகாரியாக பதவி உயர்வு பெற்றபின், சென்னை தெற்கு மண்டல இணை கமிஷனராகவும் அதனைத் தொடர்ந்து தி.நகர். மயிலாப்பூர் கீழ்ப்பாக்கம் கோவை மாவட்டம் உள்ளிட்ட இடங்களில் துணை கமிஷனராக பணிபுரிந்தவர். தொடர்ந்து லஞ்ச ஒழிப்புதுறையில் சிறப்பாக செயல்பட்டவர். துணிச்சல் மிக்க பெண் ஐ.பி.எஸ். யான லட்சுமி பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டவர் என்பதால் அவரின் வருகையை திருப்பூர் மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துள்ளனர். பொறுப்பேற்றுக்கொண்ட புதிய காவல் ஆணையருக்கு திருப்பூர் மாவட்டம்
தின தமிழ் நாளிதழ் நிறுவனத்தின் தலைமை நிருபர் முகமது கௌஸ் மரியாதை நிமித்தமாக சந்தித்து
தின தமிழ் நாளிதழை வழங்கி பணி சிறக்க வாழ்த்து தெரிவித்தார்.