திருப்பூர் ஜூன்: 16
திருப்பூர் அங்கேரிபாளையத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா இன்று நடந்தது.
இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மாவட்ட ஆட்சியாளர்
தா. கிறிஸ்துவராஜ் ஈரோடு பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர்கள். தெற்கு சட்டமன்ற உறுப்பினர்
க. செல்வராஜ் மேயர் தினேஷ்குமார் மண்டல தலைவர் இ.ல. பத்மநாதன்
கோவிந்தராஜ் உமா மகேஸ்வரி உட்பட பலர் பங்கேற்றனர். தமிழ்நாடு முழுவதும் 12,618 கிராம ஊராட்சிகளில் உள்ள விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் ஊக்குவிக்கும் வகையில் ரூ. 86 கோடி மதிப்பில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வை கடந்த ஆண்டு துவங்கி வைத்தார்.
திருப்பூர் மாவட்டத்தில் 265 ஊராட்சிகளை சேர்ந்த 410 விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு ரூ. 20 கோடி மதிப்பிலான 33 வகையான விளையாட்டு உபகரணங்களை வழங்கப்பட்டது. தொடர்ந்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் புதிய இலச்சினை(லோகோ) வெளியிடப்பட்டது.
நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: கருணாநிதி நூற்றாண்டு விழா நிறைவை ஒட்டி, தமிழ்நாட்டில் உள்ள ஊராட்சிகளில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படுகிறது. கிரிக்கெட், கால்பந்து உள்ளிட்ட 33 வகையான விளையாட்டுகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படுகிறது. தொழில்துறைக்கு மட்டுமின்றி திருப்பூர் மாவட்டம், விளையாட்டுத்துறைக்கும் சிறப்பான பெருமையை சேர்க்க வேண்டும். கேலோ இந்தியாவில் தமிழ்நாடு 2-ம் இடம் பிடித்தது. அதற்கு காரணம் தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைகள் தான். இந்தியாவிலேயே விளையாட்டுத்துறை என்றால், அது தமிழ்நாடு தான் என்று சொல்லும்படி பல்வேறு புதிய முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். விளையாட்டு நகரங்களில் மட்டுமின்றி கிராமங்களுக்கும் சென்று சேர வேண்டும். அதற்கு இங்கு வழங்கப்படும் விளையாட்டு உபகரணங்கள் பயன் அளிக்கும். கிராமப்புறங்களில் இருந்து விளையாடுத்துறையில் மாணவர்கள் சாதிக்க வேண்டும். ஒரு விளையாட்டு வீரருக்கு இருக்க வேண்டிய அத்தனை குணங்களும், கருணாநிதிக்கு இருந்ததால் தான் இந்த திட்டத்துக்கு கலைஞர் பெயர் சூட்டினோம். நீண்ட தூரம் ஓடினால் தான், அதிக அதிக உயரம் தாண்ட வேண்டும். உழைக்க வேண்டும். விளையாட்டு உபகரணங்கள் பெறும் நீங்கள் ஒவ்வொருவரும் அரசின் முகமாக இருந்து சாதிக்க வேண்டும். தாராபுரத்துக்கு விளையாட்டு மைதானம் கோரியுள்ளார். வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அந்த அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார். மக்களவைத் தேர்தலில் 40-க்கு 40 வெற்றி பெற்றுள்ளோம். ஆகவே ஒவ்வொரு தொகுதிக்கும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு நமக்கும், இந்த அரசாங்கத்துக்கும் உண்டு. இவ்வாறு அவர் பேசினார். சர்வதேச தடகள வீரர் ஒலிம்பியன் தருண் அய்யாசாமி, கேலோ இந்தியா போட்டியில் தங்கம் வென்ற தேசிய வீராங்கனை பவினா ஆகியோர் மேடையில் உதயநிதி ஸ்டாலின் அருகில் அமர வைக்கப்பட்டு மேடையில் கவுரவிக்கப்பட்டனர்.