சிவகங்கை: ஆகஸ்ட்:04
சிவகங்கை நகராட்சி சார்பில் பெரும்பாலான மக்கள் திட்டங்களை நிறைவேற்றி வரும் நகர்மன்றத் தலைவர் சி.எம். துரை ஆனந்த் காளவாசல் பகுதியில் உள்ள மாப்பிள்ளை தேவர் ஊருணி கரைகளில் புதிய பேவர் பிளாக் நடைபாதை அமைத்திட பூமி பூஜை நிகழ்வில் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.
இதனிடையே முற்றிலும் புனரமைப்பு செய்துள்ள நகராட்சி ஊருணியான செட்டியூரணி கல்வெட்டை திறந்து வைத்தார்.
அப்போது அவர் கூறுகையில் சிவகங்கை நகரில் மக்கள் தொகை அதிகமானதன் காரணத்தால் போக்குவரத்து இடையூறுகளை போக்கிடும் வகையில் நகராட்சி சார்பில் சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளதாக கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் நகர்மன்றத் துணைத் தலைவர் வழக்கறிஞர் கார்கண்ணன் மாவட்டத் திட்டக்குழு உறுப்பினரும் நகர்க்கழக துணை செயலாளருமான வீணஸ் இராமநாதன் திமுக மாவட்ட பிரதிநிதிகள் கவுன்சிலர்கள் ஜெயகாந்தன் வீரகாளை அயூப் கான் விஜயகுமார் சண்முகராஜன் இராஜேஸ்வரி இராமதாஸ் ஆறு சரவணன் கீதா கார்த்திகேயன் நகர் மகளிரணி இராஜேஸ்வரி அண்ணாத்துரை மற்றும் திமுக நிர்வாகிகள் கரும்பாவூர் சண்முகம் கணேசன் முனியராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.