திமுக மாணவர் அணியில் 5 ஆயிரம் பட்டதாரிகள் புதிய உறுப்பினர்களாக சேர்க்கப்படுவர்
மாநில தலைவர் ராஜீவ் காந்தி பேச்சு
ராமநாதபுரம், செப்.24 – ராமநாதபுரம் மாவட்ட திமுக மாணவரணியில் 5000 பட்டதாரிகள் புதிய உறுப்பினர்களாக சேர்க்கப்படுவர் என திமுக மாணவரணி மாநில தலைவர் ராஜிவ் காந்தி பேசினார். ராமநாதபுரம் மாவட்ட திமுக மாணவரணி சார்பில் ஒன்றிய, நகர், பேரூர் பொறுப்பாளர்களுக்கான நேர்காணல் ராமநாதபுரத்தில் இன்று நடைபெற்றது. மாவட்ட திமுக செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம்
எம்எல்ஏ தலைமை வகித்தார். திமுக மாணவரணி தலைவர் ராஜிவ் காந்தி தொடங்கி வைத்தார். அவர் பேசுகையில், தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் மாணவர்களின் பங்கு அளப்பரியது. திமுகவில் இளைஞரணியை போல் மாணவரணிக்கு வலுவான கட்டமைப்பு உருவாக்க 30 வயதிற்குட்பட்ட பட்டதாரிகள் திமுக தலைமையின் அறிவுறுத்தல் படி ஒன்றிய, நகர், பேரூர் நிர்வாகிகள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். ராமநாதபுரம் மாவட்ட மாணவரணியில்
மாவட்ட திமுக ஒத்துழைப்புடன்
5 ஆயிரம் பட்டதாரிகள் சேர்க்கப்படுவர் என்றார். அவர் நிர்ணயித்த இலக்கை எட்ட நேர்காணலில் பங்கேற்ற மாணவர்கள் கைகளை ஆமோதித்தனர்.
மாவட்ட திமுக செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் பேசும்போது,
திமுக மாணவரணிக்கு எதிர்காலம் சிறப்பாக உள்ளது. பட்டம் பெற்ற 30 வயதிற்குட்பட்டோர் மாணவரணி நிர்வாகிகளாக தேர்வு செய்யப்படுவர். இளம் பட்டதாரிகள் மாணவரணி நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பதன் மூலம் திமுக மேலும் வலுப்பெறும். இவ்வாறு பேசினார்.
மாணவரணி மாநில துணை செயலாளர்கள் அதலை செந்தில் குமார், பூரண சங்கீதா, நகராட்சி தலைவர்கள்
கார்மேகம் (ராமநாதபுரம்), சேது கருணாநிதி (பரமக்குடி), நாசர் கான் (ராமேஸ்வரம்), ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் பிரபாகரன்,
நகராட்சி துணைத்தலைவர்கள் பிரவீன் தங்கம் (ராமநாதபுரம்), ஹமீது சுல்தான் (கீழக்கரை), திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் அஹமது தம்பி, மாவட்ட துணை செயலாளர் கருப்பையா, மாணவரணி மாவட்ட துணை அமைப்பாளர்கள்
ஸ்டாலின், பொன் மணி சங்கர், சம்பத், சண்முக பிரியா, வசந்தகுமார், மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் பிரவீன் உட்பட பலர் கலந்துகொண்டனர். மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சுரேஷ் நன்றி கூறினார்.