கன்னியாகுமரி நவ 11
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள காஞ்சாம்புறம் பகுதியில் மாஸ்டர் ராஜு என்பவர் ஆலன் திலக் சிட்டோ ரியூ கராத்தே பள்ளியை புதிதாக துவங்கி உள்ளார்.கராத்தே பள்ளியை கமலம் திறந்து வைத்தார். இதில் சிறப்பு விருந்தினர் பா.ஜோணி அமிர்த ஜோஸ், மற்றும் மனோஜ், மாஸ்டர். ராஜு ,லதி,வினு ,ரக்ஷிதா,
ஷமினா ஸ்ரீ, ஷமிரா ஆகியோர் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர்.
மாஸ்டர் ராஜூ அனைவரையும் வரவேற்று பேசினார்.தொடர்ந்து நித்திரவிளை ஜோஸ் தீரஜ் பண்பாட்டு சேவா அறக்கட்டளையின் மக்கள் தொடர்பு அலுவலர் மற்றும் கலை ஆர்வலர் பா.ஜோணி அமிர்த ஜோஸ் வாழ்த்துரை வழங்கினார்.மாஸ்டர் லதி நன்றி உரை வழங்கினார். மற்றும் கராத்தே மாணவ மாணவியருக்கு கலர் பட்டைக்கான தேர்வு நடைபெற்று கராத்தே கலர் பட்டை வழங்கப்பட்டது. நிகழ்வில் சென்சாய் சந்திரன் கலந்துகொண்டு சிறப்பித்தார்.கராத்தே பயிலும் மாணவ மாணவியரின் பெற்றோர்கள் மற்றும் ஊர் மக்கள் பலரும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.