கம்பம்.
தேனி மாவட்டம் கம்பத்தில் கம்பம் வட்டார முல்லைமாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பில் புதிய மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது. கம்பம் நகராட்சி அலுவலகத்தில் நகர் மன்ற தலைவர் வனிதா நெப்போலியன், தலைமையில் நகராட்சி ஆணையர் வாசுதேவன் முன்னிலையில் இந்த அடையாள அட்டை வழங்கப்பட்டது. அம்மாபட்டி ரேவந்த்,சீப்பாலக்கோட்டை மதன், பூசாரணம் பட்டி சுதா, கம்பம் முகமது ரஷாக் ஆகியோர் பயனடைந்தனர். இதற்கான முழு முயற்சி எடுத்த மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய அடையாள அட்டை பெற்றுக் கொடுத்த தமிழ்நாடு அரசு மாநில மாற்றுத்திறனாளிகள் நல வாரிய உறுப்பினர் எஸ். கருப்பையாவை கம்பம் நகராட்சி ஆணையரும் கம்பம் நகர் மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் அவர்களும் தன்னலன் பாராமல் சீரும் சிறப்புமாக செயல்படும் தங்களது பணி மென்மேலும் சிறக்க எங்களது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் என கூறினார்.
தேனி மாவட்ட செய்தியாளர். அசோக்குமார்.