கிருஷ்ணகிரி கட்டிக்கானபள்ளி பஞ்சாயத்து புதிய வீட்டு வசதி வாரியம் பகுதி 2, சத்யசாய் நகர் பகுதிகளை இணைக்கக்கூடிய பகுதியில் சாலையின் நடுவில் அலங்கார கம்பிவேலி, மின்விளக்கு, மணிக்கூண்டு, ஆகியவை ரூபாய் 26.73 லட்சம் மதிப்பில் பிரபல தனியார் நிறுவனமான வெங்கடேஸ்வரா சில்க்ஸ் & ஜுவல்லர்ஸ், சார்பில் நிறுவப்பட்டு அந்நிறுவன உரிமையாளர் எம்.பி.ரமேஷ், பி.ஆர்.விஷ்ணு, பி.ஆர்.விஷால், ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி கோவிந்தராஜ், மற்றும் கோவிந்தராஜ் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். திறப்பு விழாவில் சத்யசாய் நகர் குடியிருப்பு நல சங்கத்தின் பொறுப்பாளர்கள் நிர்மல், ஜுனைத், அன்னப்பன், ராகுல், மணிகண்டன், கண்ணன், சிவசங்கர், ராஜன், மற்றும் எஸ்.வி.என் ஹாஸ்பிடல் டாக்டர் ரமேஷ், சித்த மருத்துவம் மற்றும் வார்டு உறுப்பினர் ஹரிஹரன், மற்றும் சுபத்திரை ஹரிஹரன், காவல் ஆய்வாளர் குலசேகரன், மூத்த வழக்குரைஞர் பார்த்திபன், உள்ளிட்டோர் பங்கு பெற்றனர். இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் அலங்கார கம்பி வேலி மின்விளக்கு மணிக்கூண்டு ஆகியவை அமைத்துக் கொடுத்த கிருஷ்ணகிரி தொழிலதிபர்களுக்கு வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர்.
புதிய வீட்டு வசதி வாரியம் மகளிர் கலைக் கல்லூரி

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics