சங்கரன்கோவில்
சட்டமன்ற தொகுதி மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றியம்
மருதங்கிணறு கிராமத்தில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ20லட்சம் மதிப்பீட்டில் சமுதாயநலக்கூடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடந்தது.மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை தலைமை வகித்தார்.
ஊராட்சி மன்ற தலைவர் தங்கதுரை முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு சமுதாய நலக்கூடம் கட்டும் பணியை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில்
மாவட்ட பிரதிநிதி சண்முகப்பாண்டியன், மாவட்ட சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு தலைவர் மரியலூயிஸ் பாண்டியன், மேலநீலிதநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் பரமசிவன், கந்தசாமி,ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் அசோக்குமார், பூத் கமிட்டி முகவர் பெரியசாமி, ஒன்றிய விவசாயி துணை அமைப்பாளர் தங்கதுரை, அரசு ஒப்பந்ததாரர் மாடசாமி,
கிளைக் கழக செயலாளர் முத்தரசு, சுவாமிதாஸ் ,ராமகிருஷ்ணன், சிவசுப்பிரமணியன், பொறியாளர் மாதவன் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.