நாகர்கோவில் அக் 7
குமரி மாவட்டம் நாகர்கோவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாஞ்சில் முருகேசன்
மற்றும் நாகர்கோவில் மாநகர அதிமுக வடக்கு மண்டல செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான ஶ்ரீலிஜா ஆகியோர் அறுகுவிளை குழந்தை தெரசா ஆலயத்திற்கு புதிய தேர் செய்வதற்காக
தங்களது சொந்த நிதியில் இருந்து 5 லட்ச ரூபாய் வழங்கினர்.
மேலும் ஆலயத்தில் நடைபெற்ற தேர் திருவிழாவை முன்னிட்டு பங்குத்தந்தை முன்னிலையில் புதிய தேரை ஶ்ரீலிஜா ஆலயத்திற்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில் வட்ட செயலாளர்கள் மிக்கேல்ராஜ், வட்ட பிரதிநிதி ராஜன் உட்பட ஆலய நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் இருந்தனர்.