தஞ்சாவூர். நவ.5
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அடுத்த கோட்டாரப்பட்டி கிராமத் திற்கு தஞ்சாவூர் பழைய பஸ் நிலையத்திலிருந்து புதிய பஸ் வசதி தொடங்கப்பட்டுள்ளது.
கோட்டாரப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் முரசொலி எம்பி, துரை. சந்திர சேகரன் எம்எல்ஏ ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவுப்படி போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வழிகாட்டுதலின்படியும் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி இந்த பஸ் இயக்கப்படுகிறது .தஞ்சாவூர் பழைய பஸ் நிலையத்திலிருந்து காலை மற்றும் மாலை நேரங்களில் தொண்டராயன்பாடி வழியாக கோட்டாரப்பட்டி வரை தட நீட்டிப்பு செய்து இயக்கப்படுகிறது முதலமைச்சர் அமைச்சரின் உத்தரவுக்கிணங்க பொது மக்களின் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டு வருகிறது .அதன் அடிப்படையில் இந்த பஸ் சேவை தொடங்கப்பட்டு ள்ளது .அரசின் மீது போன்ற சிறப்பான திட்டங்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு முரசொலி எம்பி துரை சந்திரசேகரன எம்எல்ஏ கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சித் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி ஒன்றிய குழு தலைவர் கல்லணை செல்லக் கண்ணு,தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்ட பொது மேலாளர் ஸ்ரீதரன் துணை மேலாளர் (வணிகம்) தமிழ்ச்செல்வன் கிளை மேலாளர் ரமேஷ் ஊராட்சி மன்ற தலைவர் ராஜா, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் அரசு அலுவலக தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.