நாகர்கோவில் நவ 9
கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூபாய் 3.5 கோடி மதீபீட்டில் பழுதடைதுள்ள பாலங்களை புதுப்பித்து, புதிய பாலங்கள் கட்டுவதற்கு விஜய் வசந்த் எம்.பி பரிந்துரை செய்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளின் குறுக்கே அமைந்துள்ள பல பாலங்கள் மிகவும் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளன. இவற்றை அகற்றி புதிய பாலங்கள் அமைக்க வேண்டும் என பல்வேறு பகுதி மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் அவர்களுக்கு கோரிக்கை வைத்தனர். இதனை ஆய்வு செய்து பரிசீலித்த பின் கீழ்கண்ட 5 பாலங்கள் கட்டுவதற்கு விஜய் வசந்த் எம்.பி அவர்கள் பரிந்துரை செய்துள்ளார்.
இதில் புறக்கை – காக்கம்புதூர் சாலையில் பறக்கை குளத்தின் குறுக்கே பாலம்,
பொட்டல்குளம் – அழகப்பபுரம் சாலையில் பொட்டல்குளம் மறுகால் சப்பாத்தில் உயர்மட்டப்பாலம்,
முக்கடல் சாலையில் பொதுப்பணித்துறை சானலின் குறுக்கே
பாலம்,
புதுக்குளம் சாலையில் காட்டுபபுதூர் அருகே ஓடையின் குறுக்கே பாலம்,
ஈத்தங்காட்டுமடம் சாலையில் ராஜாவூர் அருகே வாய்க்காலின் குறுக்கே பாலம் என
சுமார் 3.5 கோடி செலவில் இந்த பாலங்கள் கட்ட நபார்ட் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கடிதம் மூலம் விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை வைத்துள்ளார்.