தென்தாமரைகுளம்., நவ. 18.
தென் தாமரைகுளம் அருகே உள்ள இலந்தையடிவிளையில் புதிய கலையரங்கம் கட்டிதர ஊர் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து கலப்பை மக்கள் இயக்க நிறுவனத் தலைவர் பி.டி.செல்வகுமார் புதிய கலையரங்கம் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டினார். இந்நிகழ்வில், கலப்பை மக்கள் இயக்க மாவட்ட தலைவர் வக்கீல் பாலகிருஷ்ணன், இலந்தையடிவிளை ஊர் தலைவர் எஸ்.ராஜேந்திரன், செயலாளர் பகவதி ஈஸ்வரன், பொருளாளர் பொன்முருகன், மழலையர் பள்ளி தாளாளர் சிந்து லட்சுமி, கலப்பை மக்கள் இயக்க அமைப்பாளர் வேல்முருகன், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் செந்தில் மோகன், , கலப்பை மக்கள் இயக்க அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி தலைவர் சுடலைமணி, பாலமுருகன், இளையபெருமாள், தங்கநாடார், கணேசன், வேல்நாடார், பால்துரை, அரவிந்தன், சந்திரன், திருமால், பாலன், செல்வராஜன், மோகன், ஜி. மோகன், முருகேசன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.