நாகர்கோவில் நவ 22
குமரி மாவட்டம் மேலசங்கரன்குழி முதல் நிலை ஊராட்சி வைராக்குடியிருப்பு குக்கிராமத்தில் ஏற்கனவே செயல்பட்டு வந்த அங்கன்வாடி பழுதுடைந்த காரணத்தால் புது அங்கன்வாடி கட்ட மேலசங்கரன்குழி ஊராட்சி தலைவர் முத்து சரவணன் தலைமையில் முடிவு செய்யப்பட்டது. இதற்காக ஊராட்சி பொது நிதி மற்றும் மத்திய அரசின் திட்ட நிதி 1200000/-ஒதுக்கப்பட்டு புதிய அங்கன்வாடி கட்டி முடிக்கபட்டது.
இந்த புதிய அங்கன்வாடி கட்டிடத்தை நேற்று (21-11-2024) ஊராட்சி தலைவர் முத்து சரவணன் தலைமையில் காலை அங்கன்வாடி குழந்தைகள் திறந்துவைத்தனர்.
இந்நிகழ்வில் ஊராட்சி துணை தலைவர் ரமேஷ் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயா, கனகாபாய் வார்டு உறுப்பினர் சாந்தி ஊராட்சி செயலாளர் சசிகலா ஊராட்சி பணியாளர்கள் ஊர் தலைவர் தங்கசுவாமி, விஜயகுமார், கண்ணன்,குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பாலசரஸ்வதி, மேற்பார்வையாளர் கலாவதி, ஒருங்கிணைப்பாளர் ஜெகதீஸ்வரி, அங்கன்வாடி பணியாளர்கள் ஜெயராணி, வல்சலா, ஜோஸ்பின்ராணி, மேபெல், சாந்தகுமாரி, சௌதா,மற்றும் குழந்தைகள்,பெற்றோர்களும் கலந்து கொண்டனர்கள். அங்கன்வாடி குழந்தைகளை வைத்து அங்கன்வாடி புதிய கட்டிடத்தை திறந்து வைத்த மேலச்சங்கரன்குழி ஊராட்சி மன்ற தலைவரின் செயலை அனைத்து தரப்பினரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.