கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியத்தில் 34 ஊராட்சிகள் உள்ளது, இதில் ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 375 பொதுமக்களும், ஊத்தங்கரை 15 வார்டுகளை கொண்ட பேருராட்சியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொண்ட பெரிய ஊராட்சி, இந்த ஒன்றியத்தில் படிப்பறிவு மற்றும் வேலை வாய்ப்பு குறைவாகவே உள்ள ஒன்றியமாக உள்ளது, இங்கு உள்ள பொதுமக்கள் விவசாய மற்றும் கூலி வேலை செய்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் உடல்நிலை மற்றும் விபத்துக்கள் ஏற்பட்டால்
ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு தான் வரவேண்டும் ஆனால் இம்மருத்துவமனையில் இரவில் கர்ப்பிணி பெண்கள் பிரசவத்திற்கு வந்தால் சுகபிரசவம் ஆகக்கூடிய கர்ப்பிணி பெண்களை கூட தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மருத்துவமனைக்கு அனுப்பி விடுகின்றனர். அதேபோல விபத்தில் காயமுற்றவர்களை மருத்துவமனை சென்றால் உடனடியாக தர்மபுரி மருத்துவமனைக்கு அனுப்பி விடுகின்றனர், இந்த மருத்துவமனை ஊத்தங்கரை நகரில் மையப் பகுதியில் அமைந்துள்ளது இங்கு பல் மருத்துவர், அறுவைச் சிகிச்சை மற்றும் பொது மருத்துவர்கள் எலும்பு முறிவு மருத்துவர்கள் என நிறைய மருத்துவர்கள் இருந்தாலும் இரவு நேரங்களில் செவிலியர்களை கொண்டு மருத்துவம் பார்க்க விட்டு மருத்துவர்கள் தங்களுடைய ஓய்வு அறையில் ஓய்வு எடுப்பதே வாடிக்கையாக செய்து வருகின்றனர். மேலும் குறிப்பாக இரவு நேரங்களில் வரும் நோயாளிகளுக்கு
முதலுதவி மட்டும் செய்துவிட்டு தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரிக்கு பரிந்துரை செய்து விடுகின்றனர்.
மேலும் மருத்துவர்கள் ஓ.பி, மட்டும் நோயாளிகளை சிகிச்சை பார்த்துவிட்டு ஓ.பி முடிந்ததும் தங்களுடைய தனியார் கிளினிக் சென்று விடுகிறார், இதனால் ஏராளமான நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாவதாக கூறுகின்றனர்.
இந்நிலை மாற வேண்டி மாவட்ட நிர்வாகமும் தனி கவணம் செலுத்தி தனியார் மருத்துவமனை போல செயல்பட வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் அலட்சியம்

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics