ஏப்ரல்: 08
திருப்பூரில் கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்களை காக்கும் வகையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு நீர்மோர் மற்றும் பழ வகைகளை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 48 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர். விஜயலட்சுமி கோபால்சாமி தலைமையில் திருப்பூர் காங்கேயம் சாலை ராக்கியாபாளையம் பகுதியில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நீர் மோர் பந்தல் திறப்பு விழாவை திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவர். முன்னாள் சேர்மன் R.கிருஷ்ணன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
தொடர்ந்து பொதுமக்களுக்கு நீர் மோர் தர்பூசணி மற்றும் பழ வகைகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் கோபால்சாமி
V.R. ஈஸ்வரன் வார்டு தலைவர்கள் சரவணன் சண்முகசுந்தரம் அன்பழகன் மாரிமுத்து
அய்யாசாமி முருகன் ஆனந்தன்
பழனி.
பிரதீப்
மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.