ஈரோடு ஜூன் 15
ஈரோட்டில் ஒலி மாசு தடுப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி ஈரோடு காளிங்கராயன் இல்லத்தில் இருந்து புறப்பட்டது இந்த பேரணி பெருந்துறை ரோடு வழியாக ஈரோடு சம்பத் நகரில் உள்ள இந்திய மருத்துவ சங்கத்தை அடைந்தது இந்திய மருத்துவர் கிளை மற்றும் காது மூக்கு தொண்டை மருத்துவ சங்கம் ஆகியவற்றின் சார்பில் நடந்த இந்த பேரணிக்கு தமிழ்நாடு மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் அபுல்ஹசன் தலைமை தாங்கினார் இந்திய மருத்துவ சங்கத்தின் அகில இந்திய தலைவர் அசோகன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்
இதன் பிறகு அவர் கூறியதாவது
நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நிறைந்துள்ளதாக தகவல் வருகின்றன. எனவே இது குறித்து சிபிஐ விசாரணை தேவை. 1363 மாணவர்களுக்கு மட்டும் மறு தேர்வு நடத்துவது சரியல்ல. இது குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்திய மருத்துவ சங்கம் இப் பிரச்சினையில் முழுமையான முடிவு எதையும் எடுக்கவில்லை. இது சமூக நீதி மற்றும் மருத்துவர்களின் தகுதி குறித்த பிரச்சினையாகும். மேலும் நீட் தேர்வு அகில இந்திய விஷயமாகும் பல மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. பல மாநிலங்கள் சம்பந்தப்பட்டது. எனவே இந்திய மருத்துவ சங்கம் நீட் தேர்வு நடத்துவதா கூடாதா என்று
தெளிவான முடிவு எடுக்கவில்லை. மருத்துவ கட்டமைப்புகளுக்கு மத்திய மாநில அரசுகள் ஒட்டுமொத்தமாக ஜிடிபியில் (உள்நாட்டு மொத்த உற்பத்தி) 1.1% ஒதுக்குகின்றன. இதை 2.5 சதமாக உயர்த்த வேண்டும். தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்த கேள்விக்கு இந்திய மருத்துவ சங்கம் ஒரு சேவை நிறுவனம் ஆகும். எனவே இத்தகைய விசயத்தில் அது தலையிடாது. இருந்தபோதிலும் மருத்துவர்களுக்கான விதிகளை அது வகுத்துள்ளது. அது குறித்து நாங்கள் அவ்வப்போது அவர்களுக்கு அறிவுரை வழங்குகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய மருத்துவர் சங்க முன்னாள் தலைவர்கள் சி என் ராஜா, சுகுமார் மற்றும் பலர் இதில் கலந்து கொண்டனர்.