புதுக்கடை, நவ- 25
புதுக்கடை அருகே பைங்குளம் பகுதியை சேர்ந்தவர் கலா என்பவர் மகள் சிந்து (24). இவருக்கு திருமணமாகி, கணவர் எல்லை பாதுகாப்பு படையில் வேலை பார்க்கிறார். இவருக்கு குழந்தைகள் இல்லை. எம் எஸ் சி முதுகலை பட்டதாரியான சிந்துவுக்கு வேதியியல் பிரிவில் அரியர் உள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் அரியர் தேர்வு எழுத சென்றுள்ளார். அதன் பிறகு வீடு திரும்ப வில்லை.
உறவினர்கள் பல இடங்களில் தேடியும் சிந்து தொடர்பான எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து நேற்று மாலை தாயார் கலா புதுக்கடை போலீசில் காணாமல் போன மகளை கண்டுபிடித்து தர புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.